Episodes

Friday Feb 28, 2025
கடகம் மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளைக் கையாள்வது சவாலானதாக இருக்கும். அவர்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றுவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். காதல் உறவு மற்றும் திருமண உறவில் சிறு சிக்கல்கள் இருக்கலாம். உங்கள் துணையுடன் அனுசரித்து அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலையிலும் கவனமான அணுகுமுறை நிலைமையை சீராக்கும். நட்புறவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலை இந்த மாதம் சீராக இருக்கும். நல்ல வருமானம் வரும். நீங்கள் கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் காணலாம். உத்தியோகத்தைப் பொறுத்தவரை சுமாரான பலன்களே கிட்டும். தடைகள் இருக்கலாம். உங்கள் கடின உழைப்பு அங்கீகரிக்கப் படாமல் போகலாம். அது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் பல வித நற்பலன்கள் இருக்கலாம். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு அதிகம் முயற்சி செய்ய வேண்டும். ஊடகங்கள் மற்றும் சினிமா துறையில் பெரிய திட்டங்களில் பணிபுரிவது ஊக்கமளிக்காது, கற்பித்தல் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் உத்தியோகத்தில் சிறந்த நேரத்தைக் கொண்டிருக்கலாம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வல்லுநர்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு நிறுவனத்தால் ஆதரிக்கப்படலாம்.தொழிலில் சந்தை நிலவரம் அறிந்து அதற்கேற்ப புதிய உத்திகளைக் கையாள வேண்டும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். என்றாலும் பருக்கள் போன்ற சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். நல்ல உணவுப் பழக்கங்களின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று உயர் நிலையை அடைவார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் துறையில் வெற்றிகரமாக ஆய்வை முடிப்பார்கள்.
No comments yet. Be the first to say something!