Episodes

Friday Feb 28, 2025
கும்பம் மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
திருமணமான தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் கூடும். இருவரும் ஒன்றாகக் கூடி தங்களின் தரமான நேரத்தை செலவழிக்கலாம். அதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறலாம். குழந்தைகள் மற்றும் நண்பர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலையைப் பொறுத்தவரை இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். ஸ்திரமான பொருளாதார நிலையை அனுபவிப்பீர்கள். மற்றும் பொருளாதார முன்னேற்றம் காண கணிசமான வாய்ப்பு உள்ளது. கடந்த கால அனுபவங்களை பாடமாகக் கொண்டு இந்த மாதம் நீங்கள் தைரியமாக முதலீடுகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் பங்குகளை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய லாபத்திற்கான வாய்ப்புகள் இருந்தாலும், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இப்போது மாபெரும் பங்குகளை வாங்க வேண்டாம்.ஒரு சிலருக்கு உத்தியோக மாற்றம் இருக்கலாம். இந்த மாதம் உத்தியோகத்தின் மூலம் நீங்கள் சிறந்த வருமானத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. என்றாலும் சில ஆரம்ப தடைகளை நீங்கள் கடக்க வேண்டியிருக்கும். பணியிடச் சூழல் ஆறுதல் தரும் வகையில் இருக்கலாம். சக பணியாளர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு பல வழிகளில் ஆதரவு அளிப்பார்கள். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் முன்னேற்றம் காணலாம். என்றாலும் நீங்கள் இந்த மாதம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் தங்கள் அர்ப்பணிப்பிற்கான பலனைக் காணலாம். சட்ட வல்லுனர்கள் வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறுவார்கள். சினிமா மற்றும் மீடியாவில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைக் கண்டாலும் சில நிராகரிப்புகளையும் சந்திக்க நேரும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தாமதமான வெற்றியை அடையலாம் ஆனால் உறுதியான சாதனைகளை நோக்கிய உங்கள் முயற்சிகள் பின்னர் அங்கீகரிக்கப்படும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் புதுமையான திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிட்டும். செய்தொழிலில் லாபம் கிடைக்கலாம். இந்த மாதம் கூட்டுத் தொழிலை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டும் சிறப்பாக இருக்கும். உண்ணும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் நல்ல ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் மற்றும் வாழ்வை முழுமையாக அனுபவிக்க முடியும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த மாதம் சிறந்த மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம்.
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.