Episodes

Friday Feb 28, 2025
மீனம் மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். உங்கள் துணையுடன் உற்சாகமூட்டும் இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து அவற்றை மலரும் நினைவுகளாக ஆக்கிக் கொள்வீர்கள். இருவரும் பரஸ்பரம் ஒருவர் துணையை மற்றவர் விரும்புவீர்கள். இது உங்களின் உறவை வலுப்படுத்தும். இருவரும் இணைந்து செயலாற்றுவீர்கள் இது உங்கள் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு சவால்கள் மிக்கதாக இருக்கும். காதலர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான நேரமாக இருக்கும். இருவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம். இந்த மாதம் உங்கள் நிதிநிலை சீராக இருக்கலாம். உங்கள் நிதிநிலையில் ஏற்றம் காணப்படும். உங்கள் நிதி சார்ந்த முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவு பெறுவீர்கள். அவர்கள் அளிக்கும். ஊக்கமும் ஆலோசனைகளும் உங்கள் நிதி இலக்குகளை நீங்கள் எளிதாக அடைய உதவிகரமாக இருக்கும். என்றாலும் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்கவும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை மீன ராசியினருக்கு இந்த மாதம் செழிப்பான மாதமாக இருக்கும். பணியிடத்தில் நிர்வாகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை அளிப்பார்கள். நிர்வாகத்தின் மூலம் பல வெகுமதிகளை நீங்கள் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள், மூலதன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது நல்லது. தொழில் விரிவாக்கம் விரும்புபவர்கள் இன்னும் சற்று காலம் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த மாதம் நீங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். முழங்காலுக்கு கீழே சில பிரச்சினைகள் எழலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இந்த மாதம் கிடைப்பது அரிதாக இருக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று கனவு காணும் முதுகலை மாணவர்கள் அவர்கள் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை கிடைக்கப் பெறுவார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் வெற்றி காண இன்னும் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும்.
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.