Episodes

Tuesday Apr 01, 2025
Sagittarius April 2025 Horoscope Predictions
Tuesday Apr 01, 2025
Tuesday Apr 01, 2025
Sagittarians could find themselves in an unenviable situation. No matter what they do, they will not get the rewards quickly. The biggest issues may arise in office management and team dynamics. Sagittarians must postpone plans to launch a new business. However, they can start a business related to the production industry, education, and real estate. They may have wonderful relations with their life partners. Avoid any third-person involvement in the relationship. Lovers have to be careful while speaking with others about their relationship. Avoid entering into joint investment schemes. These can lead to many problems for the partners involved. Postgraduate students could get financial assistance and scholarship opportunities. Relationships with elders and parents will be challenging. Lending money to friends or family is not advisable.
Sagittarians may get job opportunities all through the month. Those in sales and the technological fields will not find it easy to get what they deserve. Natives in real estate may do well. Teachers will get credit from the management and students for all their hard work. Health professionals may get timely acknowledgment from their clientele. Overall, health will be fine. Do watch out for some shoulder injuries. Avoid lifting heavy objects. Be careful during the cold and flu seasons. Wash your hands frequently. Postgraduate students are not prone to disputes with their professors, as their marks will be good in this period. Postgraduate students appearing for competitive exams may get good scores. They may be able to get loans and scholarships.

Tuesday Apr 01, 2025
Aquarius April 2025 Horoscope Predictions
Tuesday Apr 01, 2025
Tuesday Apr 01, 2025
Aquarius natives could meet their career targets. The office management could support your efforts. There could be a pay hike during this period. Aquarius natives doing business must make only small investments now. They should not enter into partnerships or allow the undue influence of any outside party to affect their business decisions. Married Aquarius natives should control their annoyance with the spouse. Couples in love relationships will enjoy each other's company and travel to exotic destinations. Your relationship with your parents will be good. The relationship with elders will also be caring. However, you may not get along well with your children. Aquarius natives will be in a good position financially. They will make good money and indulge in excessive spending. Your career stars are shining bright. Management may give you an impressive award. Aquarius natives working in IT/ITES must be careful during meetings with the office management. Promotions and increments must be waited for patiently. Aquarius natives in media and cinema may get good perks. The Aquarius natives working in the legal profession should not be discouraged, as after some initial mishaps, they will finally gain recognition. Business persons can start small-scale businesses. However, they should avoid doing multiple businesses and partnership business. There is a possibility for you to develop problems in the stomach, so avoid outside food. Aquarian students pursuing undergraduate education may achieve great success. Postgraduate students who wish to go abroad may get visa approvals.

Tuesday Apr 01, 2025
Virgo April 2025 Horoscope Predictions
Tuesday Apr 01, 2025
Tuesday Apr 01, 2025
There may be opportunities for career advancements and business expansion. Prepare for considerable success in your professional pursuits. According to the planets, your financial position may improve. You may taste success at work, and your life partner will share this happiness. Good communication will be of the utmost importance to clear any hurdles that might come up. Relationships with family and friends will remain very strong. This month is favorable for students planning to study further or go abroad for education. In your love life, be cautious, as any wrong move may ruin your relationship. Be tolerant of your partner's quirks and odd behavior. Do not allow outsiders to disturb the family's peace. Relations between Virgo natives and their elders are likely to be nurturing and positive. You could probably receive excellent monetary returns, but extravagance or impulse buying may put you in trouble if you are not careful. Virgo natives can expect a steady hike in their salary. Those in the software domain can expect several benefits due to the hard work they have put in; the team members are expected to facilitate their success. Legal professionals may get appreciation from customers. Those who work in research and development may have plenty of support from management. Beware of employees and don't trust them too much. You may do better than your business rivals. You are entering a time of excellent health. Now is the time for school students to gain good academic results. Undergraduates will need to work harder to get good grades.

Wednesday Mar 26, 2025
Taurus April 2025 Horoscope Predictions
Wednesday Mar 26, 2025
Wednesday Mar 26, 2025
Taurus individuals may experience an important phase in their careers. You may receive support for development schemes from the office management, while your colleagues will be very enthusiastic. If Taurus individuals plan to start new business ventures, it is a good time. Natives already in business can see good expansion. In love, Taurus people can look forward to having fun with their partners. It could also be a glorious time for married couples. Married natives should especially avoid petty fights with the spouse. This may be a period of financial stability. Support will come from family and a special friend. Be prudent when making financial decisions. Refrain from making any new investments in business. There are not many options for working on-site right now. For those in the media and film domains, this is a good time to advance in their careers. There are ample opportunities for professional growth for doctors and staff in hospitals. Partnership business can reduce some of your burdens. You may be in good physical and mental health now. The health of your children will be good. A peaceful state may prevail, thus enabling good communication between the family members. Undergraduates may get good grades. The same goes for students who are hoping to pursue their postgraduate and international education. They may join the institutions and destinations of their choice. Research students should exercise some patience as they go through the final phase of approval for their thesis.

Friday Feb 28, 2025
கடகம் மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளைக் கையாள்வது சவாலானதாக இருக்கும். அவர்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றுவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். காதல் உறவு மற்றும் திருமண உறவில் சிறு சிக்கல்கள் இருக்கலாம். உங்கள் துணையுடன் அனுசரித்து அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலையிலும் கவனமான அணுகுமுறை நிலைமையை சீராக்கும். நட்புறவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலை இந்த மாதம் சீராக இருக்கும். நல்ல வருமானம் வரும். நீங்கள் கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் காணலாம். உத்தியோகத்தைப் பொறுத்தவரை சுமாரான பலன்களே கிட்டும். தடைகள் இருக்கலாம். உங்கள் கடின உழைப்பு அங்கீகரிக்கப் படாமல் போகலாம். அது உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் பல வித நற்பலன்கள் இருக்கலாம். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு அதிகம் முயற்சி செய்ய வேண்டும். ஊடகங்கள் மற்றும் சினிமா துறையில் பெரிய திட்டங்களில் பணிபுரிவது ஊக்கமளிக்காது, கற்பித்தல் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் உத்தியோகத்தில் சிறந்த நேரத்தைக் கொண்டிருக்கலாம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வல்லுநர்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு நிறுவனத்தால் ஆதரிக்கப்படலாம்.தொழிலில் சந்தை நிலவரம் அறிந்து அதற்கேற்ப புதிய உத்திகளைக் கையாள வேண்டும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். என்றாலும் பருக்கள் போன்ற சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். நல்ல உணவுப் பழக்கங்களின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று உயர் நிலையை அடைவார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் துறையில் வெற்றிகரமாக ஆய்வை முடிப்பார்கள்.

Friday Feb 28, 2025
விருச்சிகம் மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
இந்த மாதம் உங்கள் வாழ்வில் செழிப்பைக் காண்பீர்கள். வாழ்வில் வளம் பெறுவீர்கள். மகிழ்ச்சியான காதல் வாழ்க்கையைக் காண்பீர்கள். திருமணமான தம்பதிகளிடையே சமநிலை இருக்கும். இது குடும்பத்தில் அமைதியை கொண்டு சேர்க்கும். என்றாலும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. இது நம்பிக்கை பிணைப்பை உருவாக்கலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.வயதில் மூத்த குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பில் சுமுக நிலை இருக்காது. குழந்தைகளுடன் சுமுக உறவை மேற்கொள்வீர்கள். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை சராசரியாக இருக்கும் மற்றும் தேவையற்ற பணச் செலவுகளைத் தவிர்க்க, பணத்தை சேமிக்க முயற்சிக்கவும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சிறிது பணப் பற்றாக்குறை இருக்கலாம். பழைய முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களை நன்கு நிலைநிறுத்திக் கொள்வீர்கள், என்றாலும் அங்கீகாரம் வருவதற்கு முன்பு,பின்னடைவை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் யோசனைகளை வெற்றியடையச் செய்ய, சக பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண நீங்கள் சில தடைகளை கடக்க வேண்டியிருக்கும். விற்பனை மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள விருச்சிக ராசி அன்பர்கள், தங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கான பாராட்டைப் பெறலாம். திரைத்துறையினருக்கு இது அவர்களின் வெற்றிக்கான அற்புதமான நேரமாக இருக்கும். உற்பத்தி துறையில் இருப்பவர்கள் தங்கள் துறைகளில் அங்கீகாரம் பெறலாம். சட்டப் பயிற்சியாளர்கள் வாடிக்கையாளர் அங்கீகாரத்தைப் பெறுவது மிகவும் கடினம். மருத்துவத் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மிகவும் கடினம் R&D வல்லுநர்கள், தங்கள் யோசனைகளுக்கு சிறந்த அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெறுவார்கள்.விருச்சிக ராசிக்காரர்கள் புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்க நினைக்கலாம். அதிக பணம் செலவழிக்காமல் காரியங்களைச் செயல்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே தொழில்களை நிறுவியவர்கள் இந்த நேரத்தில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். தலைவலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற சிறிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இம்முறை கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

Friday Feb 28, 2025
துலாம் மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
இந்த மாதம் செழிப்புடன் இருப்பீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காதலர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். நீங்கள் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அதன் பசுமையான நினைவுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு செலுத்துவீர்கள். அது உங்கள் உறவுக்கு அழகை சேர்க்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் இருக்கும். நல்ல புரிந்துணர்வு காரணமாக குடும்பத்தில் அமைதி நிலவும். அது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் நிதிநிலை மேம்படும். பணத்தை நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். இந்த மாதம் வரும் சேமிப்பு சார்ந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பங்கு வர்த்தக முதலீடுகளை தவிர்க்கவும். இந்த மாதம் வேலை மாற்றம் இருக்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள் என்றாலும் சில தடைகளை சந்திப்பீர்கள். ஊடகங்கள் மற்றும் திரைத் துறையில் உள்ளவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை அறுவடை செய்ய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், உற்பத்தித் துறையில் உள்ள துலாம் வல்லுநர்கள் தகுதிக்கேற்ற வெகுமதியைப் பெறுவார்கள், மருத்துவத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். ஆராய்ச்சித் துறை துலாம் ராசிக்காரர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கு மகத்தான அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளைப் பெறுவார்கள். தொழிலில் குறைந்த முதலீடுகளைப் போடவும். கூட்டுத் தொழிலை தவிர்க்கவும். தொழில் குறித்த முடிவுகளை சுயாதீனமாக எடுக்கவும். உங்களுக்கு சர்க்கரை மற்றும் நீரிழிவு போன்ற சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம், உணவு கட்டுப்பாடு, நீரிழிவு பிரச்சினைகளில் இருந்து மீள உதவும்.கல்லூரிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சிறந்து விளங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

Friday Feb 28, 2025
தனுசு மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
இந்த மாதம் உறவு நிலையைப் பொறுத்தவரை சிலிர்ப்பூட்டும் அனுபவங்களைப் பெறுவீர்கள். காதலர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான மாதமாக இருக்கும். காதலர்கள் தங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வரலாம். உற்சாகமூட்டும் இடங்கள், இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்கள் மற்றும் உணவகங்கள் என வெளியிடங்களுக்கு சென்று வரலாம். இந்த அனுபவங்கள் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்குள் அன்னியோன்யம் மற்றும் பிணைப்பு நெருக்கமாக இருக்கும். என்றாலும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் சில பதட்டமான சூழலை சந்திக்கலாம். இந்த மாதம் உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். நீங்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் நிதிநிலை மேம்பட, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி புரிவார்கள். அவர்களின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல் உங்களின் பொருளாதார இலக்குகளை நீங்கள் அடைய உறுதுணையாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக செயல்படுங்கள். வெளி நபர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகள், உங்கள் நிதிநிலையை மோசமாக்கலாம். கவனம் தேவை. தொழிலில் இந்த மாதம் முதலீடு செய்யாதீர்கள். குறுகிய கால முதலீடு எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கும். இந்த மாதம் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் மிகப் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். மேலும் அலுவலக மேம்பாட்டிற்கான உங்கள் முயற்சிகளுக்கு சக பணியாளர்கள் நல்ல ஒத்துழைப்பை அளிப்பார்கள். உங்களின் சிறந்த செயல்பாட்டிற்கு, நீங்கள் அலுவலகத்தில் இருந்து பல வெகுமதிகளைப் பெறலாம். புதிய தொழில் தொடங்குபவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த மூலதனங்களில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். குறைந்த மூலதனத்தில் தொழில் தொடங்குவது நல்லது. ஏற்கனவே தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விரிவாக்கத்திற்கு பொறுமை காக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாக கல்வி பயில்வார்கள். அவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் இருக்கும். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில எண்ணும மாணவர்கள் தங்கள் எண்ணம் நிறைவேறக் காணலாம்.

Friday Feb 28, 2025
சிம்மம் மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். மாத பிற்பகுதியில் உங்கள் திருமண வாழ்வில் சில சவால்களை சந்திக்க நேரும். இந்த சூழலை அமைதியாக எதிர்கொள்ளுங்கள். பரஸ்பரம் வெளிப்படையாக இருங்கள். உங்கள் துணையுடன் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து மகிழ முயற்சி மேற்கொள்ளுங்கள். பரஸ்பரம் அன்பையும் அக்கறையையும் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான காலக்கட்டமாக இருக்கும், மேலும் வீட்டில் இருக்கும் வயது மூத்த உறுப்பினர்களுடனான உங்கள் உறவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். நிதிநிலை சராசரியாக இருக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கலாம்.பட்ஜெட் அமைத்து செயல்படுவது சிறப்பு இதன் மூலம் பணம் அதிகம் வெளியேறாமல் பாதுகாக்க இயலும். உங்கள் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் வேலை செய்வீர்கள் பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிபவர்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை சந்திக்க நேரலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களுக்கு இது அனுகூலமான நேரம். ஆசிரியராகப் பணிபுரியும் அன்பர்களுக்கு அற்புதமான காலம். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் மிகவும் பரபரப்பான நேரத்தைக் காணலாம். சினிமா மற்றும் மீடியா துறையைச் சேர்ந்தவர்களும் தங்கள் துறைகளில் சிறப்பாகப் பணி புரிவார்கள். இந்தக் காலகட்டம் புதிய தொழில் தொடங்க ஏதுவாக உள்ளது.நீங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ஏற்கனவே சொந்த வியாபாரத்தை நடத்துபவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிகரித்த லாபம் காண்பீர்கள். இந்த கட்டத்தில், சிறிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். அது உங்கள் அன்றாட செயல்பாட்டை ஓரளவு பாதிக்கும் சிறிய அசௌகரியங்களை நீங்கள் உணரலாம். முழங்கால் மூட்டு வலி போன்ற உபாதைகள் வரலாம். உடனடி மருத்துவ சிகிச்சை சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் சற்று கடினமான நேரமாக இருக்கலாம். அதேசமயம் பட்டதாரி மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். இந்த நேரத்தில், முதுகலை மாணவர்கள் வருங்கால கல்வியில் திடீர் உயர்வைக் காண்பார்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மாணவர்கள், நம்பிக்கையுடன் செயல்பட்டு தங்கள் ஆய்வறிக்கைப் பணிகளை முடிப்பார்கள்.

Friday Feb 28, 2025
ரிஷபம் மார்ச் 2025 மாத ராசி பலன்
Friday Feb 28, 2025
Friday Feb 28, 2025
திருமணமான தம்பதிகளுக்கு இடையே புரிந்துணர்வின்மை காரணமாக கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். காதலர்கள் தங்கள் உறவை வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலம் வலுப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் உறவு குறித்த விஷயங்களை இந்த மாதம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இந்த மாதம் நீங்கள் உங்கள் நிதிநிலையில் ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதிநிலை மேம்பட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவுவார்கள். அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். என்றாலும் சில சமயங்களில் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் ஆலோசனை உங்களை சில சிக்கலான சூழ்நிலைக்கு ஆட்படுத்தலாம். எனவே பண விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். புதிய முதலீடுகளை இந்த மாதம் மேற்கொள்வது ஏற்றமானதாக இல்லை. அதனை தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் உத்தியோக நிலையில் நீங்கள் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களுக்கு செல்வாக்கு கூடும். மேலதிகாரிகள் உங்கள் செயல் திறனை பாராட்டி வெகுமதிகள் அளிக்கலாம். தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் காண பொறுமை காக்க வேண்டும். ஊடகம் மற்றும் சினிமா துறையில் இருப்பவர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். சட்டத் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் சற்று சிறிய பின்னடவை சந்திக்க நேரலாம். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் மகத்தான நேரமாக இருக்கும். இந்த மாதம் புதிய தொழில் தொடங்க மிக்க அனுகூலம் இல்லை என்றாலும். குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்துபவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இந்த மாதம் நீங்கள் கூட்டுத் தொழில் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த மாதம் நீங்கள் சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சளி, லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருக்கலாம். நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் சிறந்து விளங்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் நேரம் எடுத்துப் படிக்க வேண்டும்.