Episodes

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 15 - Thiruppavai pasuram 15 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ் என்ற பெருமை பெற்ற திருப்பாவையின் இந்த பாசுரத்தில் பத்தாவது கோபிகையை எழுப்புகிறார்கள். இதன் சிறப்பு என்னவெனில் இது வரை பார்த்த பாசுரங்களில் வெளியில் இருந்தவர்கள் தான் பேசினார்கள். இந்த பாசுரம் உரையாடலாக அமைந்துள்ளது. இது நடுநாயகமான பாசுரம். இதில் வரும் அர்த்தம் தான் திருப்பாவையின் சாரம் ஆகும். இது முக்கியமான பாசுரம் ஆகும். இதில் வரும் “நானே தான் ஆயிடுக” என்ற ஒரு வரியை தெரிவிக்கத் தான் திருப்பாவையே இயற்றப்பட்டது. இல்லாத குற்றத்தை ஏறிட்டாலும் அதனை ஒத்துக் கொள்வதே நல்ல லட்சணம் என்று இந்த பாசுரத்தில் காட்டி இருக்கிறார்கள்.இந்த பாசுரத்தில் கூறப்படும் திவ்ய தேசம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருத்தலம் ஆகும். இந்த பாசுரத்தின் பொருளை தொடர்ந்து அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 14 - Thiruppavai pasuram 14 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
ஆறாம் பாசுரத்தில் இருந்து பதினைந்தாம் பாசுரம் வரை உறங்கிக் கொண்டிருக்கும் கோபிகைகளை எழுப்புகிறார்கள். இவளின் வார்த்தையை கண்ணன் மீற மாட்டான் இந்த பாசுரத்தில் இயற்கை காட்சியை வைத்து பொழுது விடிந்ததற்கான அடையாளம் கடைசியாக கூறப்படுகிறது. குவியும் ஆம்பலும், மலரும் செங்கழுநீரும் அழகாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் பொழுது விடிவதற்கான மற்ற அடையாளங்களும் அருமையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் நாவன்மை உடையவள். இந்த பாசுரத்தில் கூறப்படும் திவ்ய தேசம் மாயவரத்திற்கு அருகில் இருக்கும். தேரெழுந்தூர் ஆகும். இந்த பாசுரத்தின் பொருளை தொடர்ந்து அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 12 - Thiruppavai pasuram 12 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெரியாழ்வாருக்கு திருக்குமரியாய் அவதரித்த ஆண்டாள் தன்னை கோபிகையாக அவதாரித்து கண்ணனை குறித்து நோன்பு நோற்கிறாள். அவள் ஸ்ரீ வில்லிப்புத்தூரையே திரு ஆய் பாடியாகக் கருதுகிறாள். இந்த பாசுரத்தில் கண்ணனுடைய நண்பனாக இருக்கும் இடையன் ஒருவன் இறை கைங்கரியம் செய்யும் பொருட்டு சென்றதால் எருமைகள் தங்களது கன்றினை நினைத்து தாங்களே பால் சுரந்து இல்லத்தை பால் சேறாக மாற்றுகிறது. அத்தகு பெருமை மிக்கவனின் தங்கையை இவர்கள் எழுப்புகிறார்கள். தலையில் பனி விழ, உந்தன் தலை வாசலில் நாங்கள் வந்து நிற்கிறோம். மனதிற்கு இனியவனை நாங்கள் பாடவும் நீ எழவில்லையே. எழுந்திராய் என்று எழுப்புகிறார்கள். இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் தில்லை திருசித்திரக் கூடம் (கோவிந்த ராஜப் பெருமாள்). இந்த பாசுரத்தின் பொருளை முழுமையாக அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 11 - Thiruppavai pasuram 11 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 11, "காற்று கரவைகனங்கள்," ஆண்டாளின் பக்தி உணர்வையும் ஆன்மிக விழிப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. இந்த பாசுரத்தில், ஆண்டாள் பக்தர்களை சித்திரை மாத காலை எழுந்து, திருப்பள்ளியெழுச்சி செய்ய அழைக்கின்றார்.
பாசுரத்தின் முக்கிய அம்சம், இறைவனின் அழகையும் அவனது கிருபையையும் துதிக்கிறது. "காற்று கரவைகனங்கள்" என்கிற வார்த்தைகள் இயற்கையின் அழகையும் பக்தியின் ஒழுங்கையும் பிரதிபலிக்கின்றன. இதன் மூலம், ஆண்டாள் அனைவரும் இறைவனை அடைய ஒரே மனதுடன் ஈடுபட வேண்டும் என்று அழைக்கின்றார்.
இந்த பாசுரத்தில், பக்தர்கள் தங்களது கர்மங்களை விட்டுவிட்டு பகவானின் பாதம் சேர்ந்தால், அவர்கள் ஆனந்தத்தை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், பாசுரம் தெய்வீக சங்கமத்தின் அவசியத்தையும் பக்தர்களின் மனம் ஒரு சொர்க்கமாக மாறும் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
திருப்பாவையின் இப்பாசுரம் வழியாக ஆண்டாள், எல்லா மனிதர்களும் ஒரே சமயத்தில் இறைவனை நினைத்து, மன அமைதியையும் ஆன்மிக வளர்ச்சியையும் பெற வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார். இது, தெய்வத்தின் அருளை பெறவும், பக்தியின் முழுமையை அடையவும் ஒரு அழகிய வழிகாட்டியாக உள்ளது.
இந்த பாசுரம், ஒவ்வொருவருக்கும் பக்தியில் திளைக்கவும், தெய்வீக அருளைப் பெறவும் வழிவகுக்கும் ஒரு ஆன்மிக ஒளியாக விளங்குகிறது.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 10 - Thiruppavai pasuram 10 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
எம்பெருமானை ஒருவர் பற்றி விட்டால் அவர் வேறு எதையும் செய்ய வேண்டாம். நாம் நம்முடைய முயற்சியால் எம்பெருமானை அடைவது கஷ்டம். சித்தமாக இருக்கும் உபாயம் எதுவெனில் அவனைப் பற்றுவது தான். அந்த உறுதி நம்மில் இருந்தால் நம் வேறு எதுவும் செய்ய வேண்டாம். அத்தகைய சிறப்பு மிக்க ஒரு கோபிகையை, கண்ணனை நேரே பற்றியவளை வாசல் திறக்கவிட்டாலும் பரவாயில்லை; ஒரு பதிலாவது தரக் கூடாதா என்று கேட்கும் படி இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில் கூறப்பட்டுள்ள திவ்ய தேசம் திருக்காட்கரை (திருகாகரா) என்னும் கேரள திவ்ய தேசம். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 9- Thiruppavai pasuram 9 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
பகவான் எந்த அளவுக்கு முக்கியமோ, அவனது அடியவர்களும் அந்த அளவுக்கு முக்கியமானவர்கள். இது வரை கோபிகையின் குணத்தை சொல்லி எழுப்பியவர்கள் இந்த பாடலில் மாமன் மகள் என்று உறவு முறை கூறி ஒரு கோபிகையை விளித்து எழுப்புகிறார்கள். மணிகளால் இழைக்கப்பட்ட மாடத்தில் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ இருக்கும் இடத்தில் உறங்குபவளை கதவைத் திற என்று கூறி எழுப்புகிறார்கள். பகவத் விஷயத்திற்கு பகவானை அனுபவிக்க உறுதுணையாக இருக்கும் உறவுகளை நாம் விடக் கூடாது என்பதை உணர்த்தும் உயர்ந்த அர்த்தம் பொதிந்த இந்தப் பாடலில் நாம் காணவிருக்கும் திவ்ய தேசம் திருக்கடிகை சோளிங்கர். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 8 - Thiruppavai pasuram 8 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
இந்த பாசுரத்தில் தூக்கத்தில் குதூகலித்திருக்கும் கோபிகையை எழுப்புகிறார்கள். பொழுது விடிந்ததற்கான அடையாளமாகக் கீழ் வானம் வெளுத்து விட்டது, எருமைகள் சிறுவீடு மேயப் புறப்பட்டு விட்டன தேவாதி தேவனைக் காண எல்லாரும் சென்று கொண்டு இருக்கிறார்கள். நாமும் புறப்புட்டு செல்ல வேண்டும். எனவே அங்கு போகின்றவர்களை நாம் நிற்கச் சொல்லி இருக்கிறோம். கண்ணனால் விரும்பப்படுபவள் நீ. நீ இன்றி அவன் முகத்தை நாம் காண இயலாது. எனவே எழுந்து வா கண்ணபிரானின் புகழைப் பாடி அவனிடத்தை அடைவோம் என்று பொருள் தரும் இந்த பாசுரத்தில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 7 - Thiruppavai pasuram 7 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
இந்த பாசுரத்தில் பேய் பெண்ணே என்று விளித்து ஒரு பெண்ணை எழுப்புகின்ற னர் ஆண்டாள் மற்றும் அவள் குழுவினர். பறவைகள் கூட கண்ணன் பெயரைக் கூற வேண்டும் என்று ஆசைப்படுகிறது மற்றும் கலந்து பேசுகிறது எனும் போது நீ ஏன் இன்னும் எழுந்து கொள்ளாமல் இருக்கிறாய். மத்தினால் தயிர் கடையும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? கண்ணபிரானின் புகழைப் பாட நாங்கள் செல்லும் போது தலைவியான நீயும் வர வேண்டும் , எனவே கதவைத் திற என்று கோபிகையை எழுப்பும் இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் திருவாய்ப்பாடி(திரு ஆயர்பாடி) கீசு கீசு என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 6 - Thiruppavai pasuram 6 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 6, "புள்ளும் சிலம்பினகான்," ஆண்டாளின் பக்தி உருகலையும், கண்ணனின் தெய்வீக வடிவத்தை துதிக்கும் தன்மையையும் பிரதிபலிக்கிறது.
இந்த பாசுரத்தில், ஆண்டாள் மற்ற பாவையரிடம் பகவான் கண்ணனை துதிக்க மாலை எழுந்து வருமாறு அழைக்கின்றார். "புள்ளும் சிலம்பினகான்" எனத் தொடங்கும் இந்த வரிகளில், இயற்கையின் ஒலி மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் பகவானின் வருகையைக் குறிக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். பறவைகளின் கீதங்கள், கோலங்களின் கரவொலி ஆகியவை பக்தர்களின் விழிப்புணர்வை தூண்டுகின்றன.
பாசுரத்தில் ஆண்டாள், யசோதையின் மகன் கண்ணனின் குழந்தைத்தனமான பரவசமான வடிவத்தையும், அவன் தெய்வீக கிருபையையும் துதிக்கின்றார். பக்தர்கள் அனைவரும் தங்கள் மரபுகளை மீறி, இறைவனின் தரிசனத்தைப் பெற விரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
இந்த பாசுரம் பக்தர்களுக்கு தெய்வத்தின் அருளைப் பெற முக்கியமான முறையாக, தெய்வீக தியானத்தையும் இறைவனின் குணங்களை துதிப்பதையும் உணர்த்துகிறது. இது அனைவருக்கும் பகவானின் பாதத்தை அடையும் வழியைக் காட்டும் ஒளியாகும்.
ஆண்டாள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் பக்தர்களின் உள்ளத்தில் தெய்வீக பாசத்தை தூண்டி, அவர்களை மனதின் அமைதிக்குக் கொண்டு செல்கிறது.
"புள்ளும் சிலம்பினகான்" பாசுரம், இயற்கை மற்றும் தெய்வீகத்தின் நெருங்கிய உறவை விளக்குகிறது. ஆண்டாள் இந்த பாசுரத்தின் மூலம் அனைத்து உயிர்களையும் பகவானின் திருவடி சேரும் உயர்ந்த ஆன்மிக பயணத்தில் இணைக்கின்றார்.

Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 5 - Thiruppavai pasuram 5 in Tamil
Tuesday Dec 31, 2024
Tuesday Dec 31, 2024
திருப்பாவை பாசுரம் 5, "மாயன்ை மன்னு வடமதுரை மைந்தன்," ஆண்டாளின் பக்தி மனதையும், கண்ணனின் தெய்வீக சிறப்புகளையும் பிரதிபலிக்கிறது. இந்த பாசுரத்தில், ஆண்டாள் மற்ற பாவையரிடம் பகவானை துதிக்க மாலை எழுந்து வருமாறு அழைக்கின்றார்.
"மாயன் மன்னு வடமதுரை மைந்தன்" என்ற வரிகள், கண்ணனின் அதிசய சக்திகளையும், வடமதுரை எனும் திருப்பதியில் அவன் தெய்வீகத் துவக்கத்தையும் குறிப்பிடுகின்றன. பாசுரத்தில், ஆண்டாள் தன் பக்தர்களை பகவானின் பெருமையை உணரச் செய்கிறார்.
இந்த பாசுரம் தெய்வீக அருளைப் பெறுவதற்கான முக்கியமான அம்சங்களை விவரிக்கிறது. பக்தர்கள் தங்கள் மனதையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, தெய்வீக பண்புகளுடன் வாழ வேண்டும் என்பதை இந்த பாசுரம் உணர்த்துகிறது.
ஆண்டாள், கண்ணனை "கறை கருந்துயிலமெல்நெற்றம்" என அழைத்துச் சொல்வதன் மூலம், அவன் அழகையும் தனித்துவத்தையும் விவரிக்கிறார். இதன் மூலம், பக்தர்கள் தங்கள் முழு மனதையும் இறைவனின் திருவடி சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
"மாயன் மன்னு வடமதுரை மைந்தன்" பாசுரம், பக்தர்கள் தெய்வீக உணர்வில் ஈடுபட வழிகாட்டியாக செயல்படுகிறது. ஆண்டாள் கூறும் ஒவ்வொரு வரியும், தெய்வத்தின் கிருபையை பெறும் வழியை சுட்டிக்காட்டுகிறது.
இந்த பாசுரம், ஆன்மிக வளர்ச்சிக்கான அழகிய அடித்தளமாக விளங்குகிறது, பக்தர்களை தெய்வீக பாதையை நோக்கி அழைத்துச் செல்கிறது.